ஆஸ்திரேலியாவில் அரைசதம்.. 3வது நாளில் பும்ரா வரலாற்று சாதனை.. கும்ப்ளே சாதனை தகர்ப்பு!
மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் என்று எடுத்தது. இந்த சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
ஆஸ்திரேலி அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் தொடக்கத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விக்கெட்டை வீழ்த்தி மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார்.
மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் என்று எடுத்தது. இந்த சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
பிரிஸ்பேனில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முதல் இன்னிங்சிலே பெரிய ஸ்கோரை குவித்து இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தும் நோக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இருந்தது.
இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் இன்று அதிரடியாக ஆட தொடங்கினார்கள். இதனையடுத்து பும்ரா புத்திசாலித்தனமான பந்து வீச்சால் ஸ்டார்க் விக்கெட்டை 18 ரன்களில் கைப்பற்றினார். இதன் மூலம் பும்ரா தன்னுடைய ஆறாவது விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த நிலையில் தான் பும்ரா ஒரு மாபெரும் சாதனையை எட்டி இருக்கின்றார். அதாவது ஆஸ்திரேலியாவில் 10 டெஸ்ட் போட்டிகள் விளையாடி பும்ரா தன்னுடைய ஐம்பதாவது விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அணில் கும்ப்ளேவின் சாதனையை பும்ரா முறியடித்திருக்கிறார்.
முதல் இடத்தில் 11 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி கபில்தேவ் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த சாதனையில் பும்ரா முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
பும்ரா இந்தியாவில் 12 டெஸ்ட் போட்டியில் விளையாடி இரண்டாவதாக அதிகபட்சமாக 47 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.