அடுத்த விமானத்த புடிச்சு ஊருக்கு போயிடுங்க… இங்கிலாந்து அணியை வம்புக்கு இழுத்த இந்திய வீரர்!

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.

அடுத்த விமானத்த புடிச்சு ஊருக்கு போயிடுங்க… இங்கிலாந்து அணியை வம்புக்கு இழுத்த இந்திய வீரர்!

இந்திய அணியுடனான மூன்றாவது போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணியால் எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.

ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் மிக சிறப்பாக  செயல்பட்டு, 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இங்கிலாந்து அணியின் இந்த படுதோல்வியை அடுத்து, கிரிக்கெட் வட்டாரத்தில் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமசாரி ஸ்ரீகாந்த், இங்கிலாந்து அணியின் பேஸ்பால் ஆட்டம் இந்திய ஆடுகளத்திற்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார்.

“வாய்ப்பு இருந்தால் இங்கிலாந்து அணி அடுத்த  விமானத்தை பிடித்து இங்கிலாந்திற்கே சென்றுவிடும், ஆனால் வேறு வழி இல்லை அவர்கள் கடைசி இரண்டு போட்டிகளை நிச்சயம் விளையாடியாக வேண்டும். 

இங்கிலாந்து அணியின் பேஸ்பால் ஆட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணி இதே போன்று விளையாடினால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது. பேஸ்பால், பேஸ்பால் என ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டாலும், ஆஷஸ் தொடரில் கூட இங்கிலாந்து அணிக்கு அவர்களது பேஸ்பால் ஆட்டம் கை கொடுக்கவில்லை. 

இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல, அதற்காக இங்கிலாந்து அணி கடுமையாக உழைக்க வேண்டும். 

அவர்களது பேஸ்பால் ஆட்டம் இந்திய ஆடுகளத்திற்கு சரி வராது. மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தை விரும்புபவர், ஆனால் பென் ஸ்டோக்ஸ் அப்படி இல்லை. சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் விளையாடியாக வேண்டும்” என்று தெரிவித்தார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp