வணிகம்

பாணின் விலைமாற்றம் ரத்தானது

5 ரூபாயால் பாணின் விலையை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, மீண்டும் பழைய விலையிலேயே பாணை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோதுமை மா ஒரு கிலோகிராம் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.

நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

  இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தலின் விலை 5 ரூபாயால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முதல், கோதுமை மாவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்றிலிருந்து கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோத்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த விலை அதிகரிப்புக்கான காரணம் என்னவென்பது குறித்து, பிரிமா நிறுவனம் அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாயாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாயாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சூப்பர் டீசலின் விலை 5 ரூபாவியால் குறைக்கப்பட்டுள்ளது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் காரணமாக சீர்குலைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மேலும் பல துறைகளுக்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் இந்தக் கடன் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்...

பொருளாதாரம் முழுமையாக வழமைக்கு திரும்பும்

இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக வழமைக்கு திரும்பும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நிலைமை வழமைக்கு திரும்பியிருப்பதால் வர்த்தக துறை மீதான நம்பிக்கை வழமைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் ஒழுங்கு செய்த நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

தாழ்நில தேயிலை கொழுந்து 103 ரூபாய்க்கு விற்பனை

கடந்த ஏப்ரல் மாதத்தில் தாழ்நில பிரதேச தேயிலை கொழுந்து ஒரு கிலோகிராம் 103 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அண்மைகாலமாக ஆகக் கூடுதலான விற்பனை விலையை இது பதிவு செய்திருப்பதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது உள்ள இந்த விலையை தக்கவைத்துக் கொள்வதற்கு உயர் தரத்திலான கொழுந்தை தொழிற்சாலைகளுக்கு கிடைக்க கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிறிய...

15 தசம் ஆறு சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதி வளர்ச்சி

தேயிலை ஏற்றுமதி வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 15.6 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சியை எட்டியுள்ளதாக, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தேயிலை, கறுவா மற்றும் இறப்பர் உற்பத்தியை...

பெரிய வெங்காயத்துக்கு வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான விசேட வர்த்தக வரி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி 20 ரூபாயால் அதிகரிப்படவுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கான 5ஆம் கட்ட கடன் உதவிக்கு அனுமதி

  இலங்கைக்கு 5ஆம் கட்ட கடன் உதவியை  வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் இறுதி தவணையாக 164 .1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி அளித்துள்ளது. இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்குவதற்கான மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட திட்டமானது 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி சர்வதேச நாணய...
- Advertisement -

Latest News

மாகாண சபை தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து நீதிமன்றில் கருத்தை கோருவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணை முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம...
- Advertisement -

இராணுவ படைகளுக்கு புதிய பிரதானி நியமனம்

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக...

Bailwaan Official Trailer – Tamil Kichcha Sudeepa

Watch Bailwaan Tamil Movie Official Trailer 2019 Director: Krishna Producer: Swapna Krishna Music: Arjun Janya DOP: Karunakar. A Film Editor: Ruben Executive Producer: S. Devraj Production Designer: Shivakumar Kusthi: A. Vijay Boxing: Larnell...

யோகிபாபுவின் ஜாம்பி ட்ரைலர்

Cast : Yogi Babu, Yashika Aannand , Gopi Sudhakar , T M Karthik , Black Sheep Anbu Written & Directed by : Bhuvan Nullan...

அவதியுறும் அம்பாள்புரம் மக்கள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்துகுட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, தொழில் வாய்ப்புக்கள் இன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்...