இந்தியா

இருமொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள்- வைரமுத்து

இருமொழிக் கொள்கையில் தமிழர்கள் தொடர்ந்து உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் குறித்து வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஹிந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும் என்று நேற்று ஒலிக்கப்பட்ட கருத்தில், தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஹிந்தி மொழி பேசாத எந்த...

61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டிபோச்சம் கோவிலுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள், பாப்பிகொண்டலு (Papikondalu) என்ற பிரபல சுற்றுலாத் தலத்திற்குச் செல்ல முடிவு...

பரோல் முடிந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்குத் திரும்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் வழங்க நளினி கேட்டுக்கொண்டதை அடுத்து நளினிக்கு...

முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று ஏமாற்றமடைந்த சிறுத்தை

நீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் மாவட்டமான நீலகிரியில் உள்ள முத்தங்கா என்ற வனப்பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புக் கருதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சுல்தான் பத்தேரியில்...

5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் 50 வயதான ஷான்பாஷா. இவர் கிடைக்கின்ற வேலைகளை செய்து அந்த பகுதியில் சுற்றிவந்தார். அவ்வப்போது...

அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் மரணம்; அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்: உயர்நீதிமன்றம்

அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைய அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்ததது தொடர்பான முறையீட்டில் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள...

37 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது..!

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக விளங்கிவந்த நடராஜர் சிலையை சுமார் 37 ஆண்டுகளுக்கு...

‘மீன்களில் ரசாயனம் பூசப்படுவதாக வெளியாகும் தகவல் வதந்தி’

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விசைப்படகுகள் அணையும் தளத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். காசிமேட்டில் மீனவர்கள் பயன் அடையும் வகையில் விசைப்படகுகள் ஒன்றுக்கொன்று மோதி சேதம் அடைவதைத் தவிர்க்கும் வகையில் அணையும் தளம் கட்டப்பட்டுள்ளது. இதைத் திறந்து வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...

தங்கத்தின் விலை இன்றும் குறைந்தது

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் சவரனுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து அதிகரித்து பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டியது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 30 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம்...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 59 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 59 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர்திறப்பும் விநாடிக்கு 50ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 21 ஆயிரத்து 725 கனஅடி நீர்வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளும் நிரம்பியிருந்தாலும், நீர்வரத்து குறைந்திருப்பதால், வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில்...
- Advertisement -

Latest News

வேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...
- Advertisement -

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...