Saturday, January 25, 2020.
Home வெளிநாடு

வெளிநாடு

புதிய கொரோனோ கிருமியால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

சீனாவில் பரவி வரும் புதிய கொரோனோ கிருமியால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதுவரை 41 பேர் புதிய கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையின்மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் சுமார் 1,700 பேர்...

நியூசிலந்து எரிமலை வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

நியூசிலந்தின் White Island எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் காயங்களுக்காகச் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இரண்டாவது...

பிலிப்பீன்ஸில் எரிமலை வெடிக்கும் அபாயம் – விமானச் சேவைகள் ரத்து

பிலிப்பீன்ஸில் 'தால்' (Taal) எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதால் மணிலாவில் விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. சுற்றுப்பயணிகள் அதிகம் நாடிச் செல்லும் இடங்களில் ஒன்றாக 'தால்' எரிமலை விளங்கிறது. எழில்மிகு ஏரியின் நடுவில் வீற்றிருக்கும் எரிமலை நேற்றிலிருந்து...

அமைதிக்கான நொபெல் பரிசை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும்; குமுறும் டிரம்ப்

அமைதிக்கான நொபெல் பரிசு கடந்த ஆண்டு தமக்கல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தற்போது குமுறிவருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒஹாயோ மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜனாதிபதி டிரம்ப்...

ஓமன் சுல்தான் மறைவுக்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்

அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சியாளராக இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். ஓமன் நாட்டின் சுல்தானான கபூஸ் பின் சையத் இயற்கை எய்தினார். கபூஸின் மறைவிற்கு பல்வேறு உலக...

பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு...

கடந்த 40 ஆண்டுகளில் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட விமானங்கள்

ஈரானில் அண்மையில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானம், ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் விமான விபத்து குறித்துச் சந்தேகம் இருப்பதாய்க்...

ஆஸ்திரேலியக் காட்டுத் தீ: 1.25 பில்லியன் விலங்குகள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயில் இரையான விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச வனவிலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவை வாட்டி வரும் கடுமையான காட்டுத் தீயால் சுமார் 1.25 பில்லியன் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று...

தகவல் பதிவுப் பெட்டியை அமெரிக்காவிடம் கொடுக்கமுடியாது: ஈரான்

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு தகவல் பதிவுப் பெட்டிகளையும் அமெரிக்காவிடமோ விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடமோ ஒப்படைக்கப்போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய விமான நிலையத்திலிருந்து விடியற்காலையில் புறப்பட்ட போயிங் 737-800...

ஈரான் மீது புதிய தடைகள் அறிவிக்கப்படும்: ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்குத் தண்டனையாக புதிய தடைகளை விதிப்பதன் மூலம் நெருக்கடி அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்தவாறு உரையாற்றிய அவர், ஈரான்மீது ஏற்கெனவே உள்ள கடுமையான பொருளியல் தடைகளுக்கு மேல் புதிய...

180 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியதாக...

இன்னொரு வளைகுடா போர்? அதிகரிக்கும் பதற்றம்!

ஈரான் நாட்டின் ராணுவத் தலைவர் சுலைமானியைக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. சுலைமானி கொலைக்குப் பழி தீர்த்தே தீருவோம் என்று ஈரான்...

Most Read

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள...

நீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

நடிகைகளை சீரழித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்… அதிர்ச்சி தகவல்

ஹொலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67). இவர் தயாரித்த திரைப்படங்கள் ஏராளமான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. இவர் மீது ஹொலிவுட் நடிகைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை...

கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்

கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். கூலி தொழிலாளி. இவரது மகன் தண்டபாணி (வயது 13). இவர் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்....
error: Content is protected !!