இந்திய அணிக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான் வெற்றி... அரையிறுதியில் மெகா ட்விஸ்ட்?

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளதுடன், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

இந்திய அணிக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான் வெற்றி... அரையிறுதியில் மெகா ட்விஸ்ட்?

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளதுடன், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

எனவே, இந்திய அணி ஆடவுள்ள அரையிறுதி போட்டியும் துபாயில் தான் நடைபெறும் என்ற நிலையில், இந்திய அணிக்கு எதிராக அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடினால், அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

துபாய் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும் என்பதால், இந்திய அணி ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை உத்தேச அணியில் தேர்வு செய்துள்ளது. 

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள ஏனைய அணிகளில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, ரஷித் கான் என சில திறமையான, அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதுடன், அவர்கள் துபாய் மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள். 

எனவே, ஆப்கானிஸ்தான் - இந்தியா அரையிறுதியில் மோதினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் அடிப்படையில், குரூப் பி பிரிவில் இருக்கும் நான்கு அணிகளில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 

அடுத்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் உள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா அணி அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளதால், அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. 

அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றால், ஐந்து புள்ளிகள் மற்றும் அதிக நெட் ரன் ரேட்டுடன் குரூப் பி பிரிவில் முதல் இடத்தை பெறும்.

அத்துடன், அடுத்து நடக்கவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி வென்றால், அரையிறுதிக்கு முன்னேறும். 

அப்போது குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதல் இடத்தை பிடிக்கும் பட்சத்தில்,  அரையிறுதியில் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தான் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதல் இடமா அல்லது இரண்டாவது இடமா என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி  வெற்றிப்பெற்றால், குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணி குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்தால், இந்திய அணிக்கு எதிராக அரையிறுதியில் மோத வாய்ப்பு உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp