சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி பிட்ச் தொடர்பில் வெளியான தகவல்
தற்போதைய தகல்களின்படி, இந்தியா-நியூசிலாந்து இறுதிப் போட்டியானது இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற அதே பிட்ச்சில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. முன்னதாக, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, லீக் ஸ்டேஜ் போட்டியில் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
எனினும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி இலகுவாக எடுத்துக்கொள்ள கூடாது.
தற்போதைய தகல்களின்படி, இந்தியா-நியூசிலாந்து இறுதிப் போட்டியானது இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற அதே பிட்ச்சில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அதாவது, சுமார் 15 நாட்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிய இதே பிட்ச்சில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த போட்டியின் அடிப்படையில் இந்த பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதுடன், இந்த பிட்ச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் 30 சராசரியுடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இருப்பினும், பிட்ச்சில் நிலையில் நிறைய மாற்றம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இப்போது இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியின்போது துபாய் பிட்ச் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தால், இந்திய அணிக்கு பாதை எளிதாகிவிடும்.
முன்னதாக, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் களமிறங்கி நியூசிலாந்து அணியை திணற வைத்தனர்.
அதன் அடிப்படையில், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் விளையாடும் லெவன் அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த மெதுவான பிட்சில் இந்திய அணி தனது பிளேயிங் லெவனில் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால், நியூசிலாந்து அணிக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பது உறுதி.
அதே நேரத்தில், போட்டியின் தொடக்கத்தின்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, முகமது ஷமி போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று பார்க்கப்படுகின்றது.