தொடந்தும் அதிரடியாக உயர்ந்து நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் தங்கம் விலை!
தங்கம் விலை: தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும்.
தங்கம் விலை
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும்.
ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.
நேற்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.44,080-ஆகவும், கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.5,510ஆக விற்பனையானது.
இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,440ஆகவும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,555ஆகவும் விற்பனையாகிறது.
அதேபோல, 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,025ஆகவும், சவரன் ரூ. 48,200ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.76க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.