கதறவிட்ட சிஎஸ்கே... ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் இடம்... தோனியின் மாஸ்டர் பிளான்!

இது வரை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிகரமான அணி என ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

கதறவிட்ட சிஎஸ்கே... ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் இடம்... தோனியின் மாஸ்டர் பிளான்!

இது வரை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிகரமான அணி என ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

2008 முதல் அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ள அணி சிஎஸ்கே தான். சிஎஸ்கே அணி 225 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 131 வெற்றிகள் பெற்று வெற்றி சதவீதம் 59 வைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி  247 போட்டிகளில் 138 வெற்றிகள் பெற்றுள்ளதுடன் வெற்றி சதவீதம் 56.7 ஆகும்.

பும்ராவின் நம்பர் 1 இடத்துக்கு ஆப்பு வைச்ச அஸ்வின்.. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் யாருக்கு தெரியுமா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 33 போட்டிகளில் 23 வெற்றிகள் பெற்று, 69.7 வெற்றி சதவீதம் வைத்துள்ளது. மற்றொரு அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 58.6 வெற்றி சதவீதம் வைத்துள்ளது.

150 போட்டிகளுக்கு மேல் ஆடிய அணிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் சிஎஸ்கே அணியே முதல் இடத்தில் உள்ளது.  

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 50.6 வெற்றி சதவீதத்துடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் 50.5 வெற்றி சதவீதத்துடனும் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 49 வெற்றி சதவீதத்துடனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47.6 வெற்றி சதவீதத்துடனும் உள்ளன.

அத்துடன், பஞ்சாப் கிங்ஸ் 46.1 வெற்றி சதவீதத்துடனும், டெல்லி கேபிடல்ஸ் 45.8 வெற்றி சதவீதத்துடனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp