ஐதராபாத் அணியை சமாளிக்குமா சிஎஸ்கே? நடக்குமா சம்பவம்!
சன்ரைசர்ஸ் அணி இதே சன்ரைசர்ஸ் மைதானத்தில் மும்பைக்கு எதிராக அவர்கள் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்தனர்.
ஐபிஎல் தொடரின்18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ள நிலையில், எதிர்பார்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சன்ரைசர்ஸ் அணி இதே ஹைதராபாத் மைதானத்தில் மும்பைக்கு எதிராக அவர்கள் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்தனர்.
சிஎஸ்கே அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வி என்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளதுடன், ஹைதராபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அதிரடியாக விளையாடுவார்கள். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும்.
சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது ஹென்றிச் கிளாசன் ஸ்ட்ரைக் ரேட் 200 என்ற அளவில் இருக்கிறது. எனவே, டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரை கட்டுப்படுத்துவதில் சி எஸ் கேக்கு சிரமம் ஏற்படும்.
எனவே, பதிரானா மற்றும் தீபக்சாகர் ஆகியோர் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே சன்ரைஸை கட்டுப்படுத்த முடியும்.
சில வேளைகளில் சன்ரைசர்ஸ் அணி 240 ரன்கள் மேல் குவிக்க வாய்ப்பு உள்ளதுடன், சிஎஸ்கே அணியிலும் பட்டையை கிளப்பும் வீரர்கள் உள்ளனர்.
ருதுராஜ் இன்னும் முழுத்திறமையை வெளிப்படுத்தவில்லை. ரச்சின் ரவீந்திரா நல்ல பார்மில் இருக்கிறார். சிவம் துபே,டேரல் மிட்செல் போன்ற வீரர்கள் ஜொலிப்பார்கள் என எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இதேவேளை, தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சமீர் ரிஸ்விக்கு இன்று நல்ல வாய்ப்பாக இருக்கும்.
அத்துடன், பெரிய அளவில் சுழற் பந்துவீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் அணியிடம் இல்லாதது அந்த அணிக்கு ஏமாற்றத்தை கொடுக்கலாம்.