செஸ் வீராங்கனையை படுக்கைக்கு அழைத்த வீரர்கள்.. கதறும் வீராங்கனை... அதிர்ச்சி தகவல்!
கடந்த ஆண்டு மகளிருக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 18 வயது வீராங்கனையான திவ்யா தேஸ்முக் கைப்பற்றி இருந்தார்.
விளையாட்டு உலகில் வீராங்கனையின் அழகை மட்டுமே சிலர் பார்க்கிறார்கள் என்றும் திறமையை பார்ப்பதில்லை என்றும் இந்திய செஸ் வீராங்கனை ஒருவர் குற்றச்சாட்டி இருந்தார்.
கடந்த ஆண்டு மகளிருக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 18 வயது வீராங்கனையான திவ்யா தேஸ்முக் கைப்பற்றி இருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில், “பெண்கள் விளையாடும் போது அவர்களுடைய அழகையும் ஆடையும் மட்டுமே கவனிக்கிறார்களே தவிர போட்டியை குறித்து யாருமே பேச மாட்டார்கள். எங்களுடைய திறமையும் பாருங்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்காவில் வசித்து வரும் செஸ் வீராங்கனை சுசன் போல்கார், தமக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.
“நான் இளம் வீராங்கனையாக இருந்த போது ஒரு முறை கூட மேக்கப் போட்டதில்லை. அதற்கு இரண்டு முக்கிய காரணம் இருக்கிறது. நான் விளையாடிய காலத்தில் நான் மட்டும்தான் பெண் போட்டியாளராக இருப்பேன். மற்றவர்கள் ஆண்களாக இருப்பார்கள்.
அந்த சமயத்தில் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார்கள். அங்கு இருக்கும் ஆன் போட்டியாளர்கள் என்னை அடித்து பாலியல் வற்புறுத்தலை தருவார்கள்.
இந்த தருணத்தில் தான் என்னுடைய திறமையை நான் செஸ் விளையாட்டில் நிரூபிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன்.
போட்டியின் போது சில ஆண்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. சில சமயம் மிகவும் ஆபத்தாக கூட போய் முடியும்.
என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக பல போட்டிகளில் நான் பங்கேற்காமல் பாதியிலே ஓடி வந்து விட்டேன்.
தொடரின் போது ஆண் போட்டியாளர்கள் மது அருந்தி விட்டால் அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது. தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வந்தேன்.
பல போட்டியாளர்கள் என்னை படுக்கைக்கு அழைப்பார்கள். அப்போது முடியாது என்று சொன்னால், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்னை உடல் ரீதியாக தாக்கி இருக்கிறார்கள்” என்று சூசன் போல்கார் தெரிவித்துள்ளமை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.