பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கிய சிம்புவுக்கு 40 வயதில் ஞானனோதயம்!
சினிமாவைப் பற்றி அவர் சின்ன வயதில் இருந்து தெரிந்துக் கொண்டவர். கமலஹாசனுக்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நடித்து நடிகராக மாறியவர்களில் சிம்பு மிகவும் முக்கியமானவர்.

டி.ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்புவை ஒரு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக உறவைக் காத்த கிளி படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், மோனிஷா என் மோனாலிஷா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிம்பு, இந்த படத்தை தொடர்ந்து, தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து இன்று மாஸ் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில்,சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சிம்பு குறித்து பல விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார். அதில், சிம்பு ஒரு சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவராக இருந்தாலும், அவருடைய உழைப்புதான் அவர் இந்த இடத்திற்கு வர முக்கிய காரணம்.
சினிமாவைப் பற்றி அவர் சின்ன வயதில் இருந்து தெரிந்துக் கொண்டவர். கமலஹாசனுக்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நடித்து நடிகராக மாறியவர்களில் சிம்பு மிகவும் முக்கியமானவர்.
சினிமாவில் சிம்புக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்பதால், அங்கு நடக்கும் தவறுகளும் சிம்புக்கு நன்றாக தெரியும் இதை கேட்டதால் தான் அவருக்கு கெட்ட பெயரே வந்தது.
அவர் சரியான நேரத்திற்கு வர மாட்டாரு, குடிக்கிறார், இயக்குநர்களை மதிப்பது இல்லை என பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. அவரிடமும் சில குறைகள் இருந்தன. ஆனால், இப்போது மாநாடுக்கு முன்பு இருந்த சிம்பு வேற, மாநாடுக்கு பின்பு இருந்த சிம்பு வேறயாக மொத்தமாக மாறி இருக்கிறார்.
இத்தனை பெயரும் புகழும் இருக்கும் மகனுக்கு திருமணம் நடக்கவில்லையே என்கிற வருத்தம் அவர்களின் பெற்றோருக்கு இருக்கிறது. பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய சிம்பு, 40 வயதாகிவிட்ட பின்னும் திருமணம் குறித்து எதுவுமே சொல்லாமல்அமைதியாக இருக்கிறார்.
அண்மையில் கூட வெந்துதணிந்தது காடு படத்தில் நடித்த கதாநாயகியை காதலிப்பதாக கிசுகிசு வந்து. சிம்பு எந்த நடிகையுடன் நடிக்கிறாரோ அவருடன் காதல் என்று பேசுவதும், திருமணம் என்று பேசுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.