தலைப்புச் செய்திகள்வெளிநாடு

முன்னாள் காதலனை பழிவாங்க வீட்டுக்கு வெங்காயம் அனுப்பிய காதலி

மே 20ஆம் திகதியான இன்று சீனாவில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

தன்னை அழவைத்த முன்னாள் காதலன் அழ வேண்டும் என்பதற்காக இளம்பெண் ஒருவர் செய்துள்ள செயல் இப்போது அங்கு வைரலாகி வருகின்றது.

சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததனர்.

காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அந்த இளம்பெண் மூன்று நாட்களாக அழுது தீர்த்துள்ளார்.

எனினும், இந்த பிரிவு தொடர்பில் காதலன் வேதனை படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

உடனே 1000 கிலோகிராம் வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார் அவர். அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை என்று எழுதப்பட்டிருந்தது.

ஜாவோவின் காதலர் வெங்காயத்தைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அத்துடன் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், 1000 கிலோகிராம் வெங்காயத்தை ஜாவோவின் முன்னாள் காதலன் வீட்டுக்கு டிரக் ஒன்று டெலிவரி செய்வதையும் காணமுடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close