ரோகித் சர்மா செய்த வேலை... குழம்பி போன இங்கிலாந்து... இந்தியாவின் வெற்றிக்கு இதுதான் காரணம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிக ரன்கள் வித்தியாச அடிப்படையில் இந்தியா பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த போட்டியின் போது ரோகித் சர்மா செய்த ஒரு காரியம் தற்போது ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகின்றது.
இங்கிலாந்து அணி பயன்படுத்திய பேஸ் பால் ஆட்டமானது அந்த அணிக்கு சறுக்கல்களையும் மிகப்பெரிய வெற்றிகளையும் கொடுத்திருக்கிறது.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார்கள். 97வது ஓவர் முடிவில் மைதானத்திற்கு தண்ணீர் பாட்டில்கள் இரு அணிகளுக்கும் கொண்டுவரப்பட்டது.
அடுத்த ஆப்பு.. பும்ராவை வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ.... இறுதி இரண்டு டெஸ்ட்டில் நீக்கம்?
அப்போது, ரோகித் சர்மா அடுத்த இன்னிங்ஸ்க்கு ட்ரெஸ்ஸிங் ரூமில் தயாராகி வந்து கொண்டிருந்தார். இதை பார்த்ததும் ரோகித் டிக்ளேர் தான் செய்துவிட்டார் என நினைத்து களத்தில் இருந்த இரு அணி வீரர்களும் பெவிலியன் நோக்கி வந்தார்கள்.
இதை பார்த்ததும் ரோகித் சர்மா டென்ஷன் ஆகியதுடன், பெவிலியன் நோக்கி வந்தவர்களைவிரட்டி அடித்து விட்டார். இதனால் இந்தியா டிக்ளேர் செய்ததா இல்லையா என்று குழப்பம் ஆடுகளத்தில் ஏற்பட்டது.
அப்போது பென் ஸ்டோக்ஸ் இந்தியா டிக்ளேர் செய்துவிட்டது. ஏன் மீண்டும் பேட்டிங் அனுப்புகிறார்கள் என்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடைசியாக கேப்டன் டிக்ளர் செய்யவில்லை எனத் தெரிந்தவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
அப்போது, இந்தியா 556 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில், ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். பெவிலியன் வந்த வீரர்களை திரும்பி விளையாடுங்கள் என்று கூறியதுடன், அடுத்த ஓவரில் டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி வீரர்களை குழப்புவதற்கா உத்தி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.