கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.

கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரானது சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, அஹ்மதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

தொடருக்கு முன்னதாக நடக்க இருந்த உலகக் கோப்பை தொடக்க விழாவானவது ரத்து செய்யப்பட்டு, 10 அணிகளின் கேப்டன்களின் மீட்டிங் மட்டுமே நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், தான் உலகக் கோப்பை விழாவை, வரும் 14 ஆம் தேதி நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக நாளை அஹ்மதாபாத்தில் மோதுகின்றன. 

இந்தப் போட்டிக்கு முன்னதாக உலகக் கோப்பை விழாவை பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்காக அஹ்மதாபாத் நரேந்திர மோடி மைதானமானது தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், அரிஜித் சிங், சுனிதி சவுகான், நேஹா கக்கர், சுக்விந்தர் சிங் ஆகியோரது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நிலையில், இந்த இசை நிகழ்ச்சியானது பிற்பகல் 12.30 மணிக்கு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட 1.30 மணி வரையில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கும், போட்டியை பார்ப்பதற்கும், சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வருண் தவான் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். 

மேலும் உலகக்கோப்பையின் மிக முக்கியமான போட்டி என்பதால் காவல்துறை, தேசிய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் உள்பட மொத்தம் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp