எப்படி வீடு கட்டிருக்காரு ஹர்பஜன் சிங்.... மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பஞ்சாப் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்த ஹர்பஜன் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் ரூ.7 கோடிக்கு பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை விளாசியுள்ளார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
ஐபிஎல் தொடரிலும் மும்பை, சிஎஸ்கே மற்றும் கேகேஆர் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடிய அவர், ஓய்வுக்கு பின் வர்ணனையாளர், சினிமா, அரசியல் என்று இருந்து வருகிறார்.
பஞ்சாப் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்த ஹர்பஜன் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் ரூ.7 கோடிக்கு பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார்.
ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள ஓய்வறை புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஹோம் தியேட்டர் செட்டப்பில் டிவி, எல் வடிவிலான சோஃபா, டிவி-க்கு அருகில் ஒரு கிட்டார் மற்றும் சிஎஸ்கே வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஆகியவை அந்த அறையில் இடம்பெற்றுள்ளது.
ஹர்பஜன் சிங் பயன்படுத்திய பேட், தொப்பு, பால், ஸ்டம்புகள் உள்ளிட்டவற்றை காட்சி பொருளாக வைக்க பிரத்யேக அறை கட்டப்பட்டுள்ளது. அதில் ஹர்பஜன் சிங் வென்றுள்ள விருதுகளும் இடம்பெற்றுள்ளன.