தோனியிடம் உள்ள சிறப்பு இதுதான்... மனம் திறந்த அம்பத்தி ராயுடு!

ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்துள்ள நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் (MI)அணியின் புதிய கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தோனியிடம் உள்ள சிறப்பு இதுதான்... மனம் திறந்த அம்பத்தி ராயுடு!

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் 19 திகதி நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அணிகள் தங்களுக்குள் வீரர்களை பரிமாற்றிக் கொண்டனர்.

அந்த வகையில் குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், மும்பை அணியில் இருந்த கேமரூன் கிரீன் பெங்களூர் அணிக்கும் trade செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்துள்ள நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் (MI)அணியின் புதிய கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரோகித்  ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ கொடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு.. இதைவிட வேற என்ன வேணும்? ரசிகர்கள் .. கொண்டாட்டம்!

அதே சமயம் 5 கோப்பைகளை வாங்கி கொடுத்த ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, தோனி இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தோனி பேட்டிங், கீப்பிங் ஆகியவற்றை சிறப்பாக செய்ய கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அதைவிட அவர் இளம் வீரர்களின் திறமைகளை கண்டறிந்து அதை வளர்த்தெடுத்து அணியை சிறப்பாக வழி நடத்துவதில் மிகவும் சிறந்தவர் என தோனிக்கு அம்பத்தி ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp