விலகிய முஷ்தபிசுர்... முக்கிய வீரரை வாங்க சிஎஸ்கே கடும் முயற்சி? 

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகளில், 4 வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது. 

விலகிய முஷ்தபிசுர்... முக்கிய வீரரை வாங்க சிஎஸ்கே கடும் முயற்சி? 

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகளில், 4 வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது. 

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸுக்கு எதிரான 2 போட்டிகளிலும் தோற்றது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றாக வேண்டும். 

அடுத்த 6 போட்டிகளிலும் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த 6 போட்டிகளும், சவால்மிக்கவைதான். சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளில் அதிரடி பேட்டிங் லைன் அப் இருக்கிறது. அடுத்து, குஜராத்தை தவிர்த்து ராஜஸ்தான், ஆர்சிபி ஆகிய அணிகளும் பலமிக்கவையாக இருக்கிறது.

முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு மே அனுமதியை நீட்டிக்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்தால், மே 1ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக விளையாடிவிட்டு நாடு திரும்ப உள்ளார்.

வங்கதேச அணி, மே 3ஆம் தேதி முதல் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி இருப்பதால், முஷ்தபிசுரை ஏப்ரல் 30ஆம் தேதி, நாடு திரும்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிஎஸ்கேவில் முஷ்தபிசுருக்கு மாற்றான வெளிநாட்டு பௌலர் இல்லை. ஷர்தூல் தாகூர், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேர் ஆகிய உள்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். 

இவர்களில் ஒருவர்தான், முஷ்தபிசுருக்கு மாற்றாக விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு மாற்றாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை சேர்க்க, சிஎஸ்கே பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஹேசில்வுட் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், வேறு எந்த மாற்று பௌலரையும் சேர்க்க வாய்ப்பில்லை.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp