மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே.. தோனியின் அபார ஃபினிஷிங்!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது.
லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.
இதன் காரணமாக ஏய்டன் மார்க்கரம் ஆறு இடங்களிலும் நிக்கோலஸ் பூரான் எட்டு ரன்களிலும் ஆட்டம் இழக்க, மிட்செல் மார்ஸ் 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் லக்னோ அணி தடுமாறிய நிலையில் ரிஷப் பன்ட் மட்டும் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் ஆயுஷ் பதோனி 22 ரன்களும் அப்துல் சமத் 20 ரன்கள் எடுக்க லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் ஜடேஜா மற்றும் பதிரானா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களம் இறங்கியது.
தொடக்க ஜோடியாக விளையாடிய ஷேக் ரசித் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி நான்கு புள்ளி ஐந்து ஓவர்களில் எல்லாம் 52 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஷேக் ரசித் 19 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார்.
இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திருப்பாதி மீண்டும் 9 ரன்கள் ஆட்டம் இழந்து சொதப்பினார். ரச்சின் ரவீந்திரா தன் பங்குக்கு 22 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க ஜடேஜா வெறும் ஏழு ரன்களில் ஆட்டம் இழந்தார்.
விஜய் சங்கர் 9 ரன்களில் பெவிலியன் திரும்ப சிஎஸ்கே அணி 11 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஆறாவது விக்கெட் ஜோடி சேர்ந்த சிவம் துபே, தோனி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒரு புறம் சிவம் துபே மெதுவாக விளையாடிய மறுபுறம் தோனி தன்னுடைய பழைய அதிரடி காட்டினார். பவுண்டரி சிக்சர் என விளாசிய அவர் 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு பௌண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 236 என்ற அளவில் இருந்தது.ஒரு கட்டத்தில் சிவம் துபேவும் தன்னுடைய பேட்டிங்கில் பவுண்டரிகளை பெற்றார்.
மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 37 பந்தில் அவர் 43 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டுக்கு இந்த ஜோடி 57 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 19.3 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.