மினி ஏலத்திற்கு முன்னதாக அணியைவிட்டு 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே! யார் தெரியுமா?
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்ற நிலையில், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி சில வீரரகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்ற நிலையில், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி சில வீரரகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்த சில வீரர்கள் அணிக்கு தேவையான பலன்களை கொடுக்கவில்லை. இதனால் ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக 5 வீரர்களை சிஎஸ்கே கழட்டி விடும் என்று கூறப்படுகின்றது.
சாம் கர்ரன்
நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை அணியில் இணைந்த சாம் கர்ரன் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார். இதனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் கழட்டிவிட அதிக வாய்ப்பு உள்ளது.
டேவான் கான்வே
சென்னை அணிக்கு கடந்த சீசன்களில் சிறப்பாக விளையாடிக் கொடுத்த டேவான் கான்வே தற்போது சிறப்பான பார்மில் இல்லை. மேலும் சில இளம் வீரர்கள் ஓப்பனிங்கில் நன்றாக விளையாடுவதால் ரச்சின் அல்லது டேவான் கான்வே இருவரில் ஒருவரை மட்டும் சென்னை அணி தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது.
விஜய் சங்கர்
மிடில் ஆர்டரில் ரன்கள் அடிக்கும் ஒரு இந்திய வீரர் வேண்டும் என்பதால் விஜய் சங்கரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி விஜய் சங்கர் விளையாடவில்லை. பேட்டிங் செய்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார். இதனால் இவரை சென்னை அணி வெளியேற்றும் வாய்ப்பு உள்ளது.
ராகுல் திருப்பாதி
சென்னை அணி ரகானேவிற்கு பதிலாக ஏலத்தில் எடுத்த வீரர் ராகுல் திருப்பாதி. ஆனால் ஓப்பனிங் இறங்கினாலும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்படுகிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் இவரை நிச்சயம் வெளியேற்றும்.
அஸ்வின்
கிட்டத்தட்ட 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வின் பந்துவீச்சில் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கேவில் இணைந்தாலும் அவரது மோசமான பார்ம் அணிக்கு பாதகமாக இருக்கிறது. இதனால் இவரை நேரத்தில் விட்டு குறைந்த விலைக்கு மீண்டும் எடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.