தோனி போட்ட ரகசிய திட்டம்.... 2 ஆண்டுகளாக வெளியே சொல்லாத ருதுராஜ்.. என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி திடீரென விலகினார். 

தோனி போட்ட ரகசிய திட்டம்.... 2 ஆண்டுகளாக வெளியே சொல்லாத ருதுராஜ்.. என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி திடீரென விலகினார். 

இதனையடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில்,  சிஎஸ்கே அணி ஐந்து போட்டிகளில் ஆடி, மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் திடீரென கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை கேப்டன் தோனி மெருகேற்றி வந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், கடந்த 2023 ஐபிஎல் தொடரில் அவருக்கு கேப்டனாக செயல்பட அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் பயிற்சி அளித்துள்ள தகவலும் கசிந்துள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் அண்மையில் அளித்த பேட்டியில் இந்த விடயங்களை தெரியப்படுத்தி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2022 ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.

அதன் பின்னர் ருதுராஜ் கெய்க்வாட்டை சந்தித்த தோனி, இரண்டு ஆண்டுகள் கழித்து கேப்டனாக வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதற்கு தயாராக இருக்குமாறு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கூறி இருக்கிறார். 

பின்னர், 2023 ஐபிஎல் தொடரில்கேப்டனாக செயல்பட  ருதுராஜ் சரியான நபரான என ஒவ்வொரு போட்டிக்கு பின்பும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் சோதனை செய்து உள்ளார்.

அதாவது, ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தால் என்ன முடிவு செய்து இருப்பார்  என பிளெம்மிங் கேட்டுள்ளதுடன்,  ஆலோசனைகளும் கூறி இருக்கிறார். 

இப்படி இரண்டு ஆண்டுகளாக தயார் செய்யப்பட்டே ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக களமிறக்கட்டு உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp