ஏப்ரல் 30ஆம் தேதியுடன் சிஎஸ்கேவில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்! சோகத்தில் ரசிகர்கள்!

குஜராத்துக்கு எதிராக 2/30 விக்கெட்களையும், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 1/47 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

ஏப்ரல் 30ஆம் தேதியுடன் சிஎஸ்கேவில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்! சோகத்தில் ரசிகர்கள்!

ஏப்ரல் 30ஆம் தேதி உடன், சிஎஸ்கேவில் இருந்து முக்கிய வீரர் விலகி சொந்த நாட்டு அணிக்காக விளையாட செல்ல உள்ளதால், அவருக்கு மாற்றாக ஆஸ்திரேலிய வீரரை சேர்க்க உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முஷ்தபிசுர் ரஹ்மான், சிஎஸ்கேவுக்காக தனது முதல் லீக் ஆட்டதிதல், ஆர்சிபிக்கு எதிராக 29 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்களை கைப்பற்றி, மேட்ச் வின்னராக இருந்தார்.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, 7 விக்கெட்களை சாய்த்துள்ளார். குஜராத்துக்கு எதிராக 2/30 விக்கெட்களையும், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 1/47 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3-ல் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், நான்காவது போட்டியில் ஏப்ரல் 5ஆம் தேதி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில், முஷ்தபிசுர் ரஹ்மான் விளையாட மாட்டார்.

தற்போது, முஷ்தபிசுர் ரஹ்மான் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்காக, விசா விண்ணப்பிக்க சென்றுள்ளார். அவர் இன்று இரவுதான் சென்னை திரும்புவார் என்பதால், நாளை சன் ரைசர்ஸுக்கு எதிராக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே, ஐபிஎலில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதியை நீட்டிக்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வங்கதேச அணி, மே 3ஆம் தேதி முதல் சிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி இருப்பதால், முஷ்தபிசுரை ஏப்ரல் 30ஆம் தேதி, நாடு திரும்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கேவில் முஷ்தபிசுருக்கு மாற்றான வெளிநாட்டு பௌலர் இல்லை. ஷர்தூல் தாகூர், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேர் ஆகிய உள்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான், முஷ்தபிசுருக்கு மாற்றாக விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஐபிஎல் 17ஆவது சீசனில் ஏலம்போகாமல் இருக்கும் ஜோஷ் ஹேசில்வுட்டை, முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு மாற்றாக சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp