சுழற்சிமுறையில் மின்சார விநியோகத்துக்கு தடை

62
colombotamil.lk

தற்போது நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக, சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படும் நேர விவரம் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 08.30 தொடக்கம் 11.30 வரையும், முற்பகல் 11.30 தொடக்கம் பிற்பகல் 02.30 வரையும் மின்சார துண்டிப்பு இடம்பெறும்.

அத்துடன், மாலை 06.30 தொடக்கம் 07.30 வரையும் மாலை 07.30 தொடக்கம் இரவு 08.30 வரையும் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என, மினசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர் வரவு குறைந்துள்ளதை அடுத்து, மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக மின் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.