எரிச்சல் அடைந்த ப்ரீத்தி ஜிந்தா.. ஏலத்தில் நடந்த சம்பவம்... சிஎஸ்கேவின் ட்விஸ்ட்!
நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேரில் மிட்செலை வாங்க டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
ஐபில் மினி ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்த அதிரடி முடிவால் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா எரிச்சல் அடைந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
முன்னதாக, நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேரில் மிட்செலை வாங்க டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் 11.75 கோடிக்கு விலை கேட்டது பஞ்சாப் அணி. அப்போது டெல்லி அணி பின்வாங்கியது.
இதனையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா 11.75 கோடிக்கு டேரில் மிட்செல்-ஐ வாங்கி விட்டோம் என அப்போது மகிழ்ச்சியுடன் இருந்தார்.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அப்போது விலை கேட்கத் துவங்கியதை எதிர்பாராத ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் விலை ஏறப் போகிறதே என எரிச்சல் அடைந்தார்.
ஆனால், சிஎஸ்கே அணி விடாப் பிடியாக நின்று 14 கோடிக்கு டேரில் மிட்செல்-ஐ வாங்கியது. 2024 மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் டேரில் மிட்செல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.