நானுஓயா, மண்சரிவு,நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை

நானுஓயா நகரத்துக்கு அண்மைய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (14) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், குறித்த நபர் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் இந்த அனர்தம் ஏற்பட்டுள்ளது.

நானுஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய மூர்த்தி இராஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர், சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.