8 ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா... இப்படியா அவுட் ஆகுறது!
2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி வெற்றிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 359 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா மோசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 3வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் 5 விக்கெட்டுகளை முதல் ஒரு மணி நேரத்திற்குள் இந்திய அணி வீழ்த்தியது.
இதனையடுத்து, 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி வெற்றிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய மண்ணில் இதுவரை 300 ரன்களுக்கு மேல் ஒரேயொரு முறை மட்டுமே இந்திய அணி சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணி களமிறங்கியது.
2ஆவது பந்திலேயே ஜெய்ஸ்வால் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை ஆரம்பித்த நிலையில், மறுமுனையில் ரோஹித் சர்மா ரன்களை சேர்த்தார். ஆனால் சான்ட்னர் பந்தில் டிஃபென்ஸ் ஆட தடுமாறிய ரோஹித் சர்மா ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெறும் 8 ரன்களில் ரோஹித் சர்மா வெளியேறினார்.
புனே மைதானத்தில் 10 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் திணறிய ரோஹித் சர்மா, தற்போது 11வது இன்னிங்ஸிலும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் அவர் மோசமான ஃபார்மில் உள்ளதுடன், கடைசி 8 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார் என்பது சுட்க்காட்டத்தக்கது.