தன்ஷிகா

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை தன்ஷிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த தன்ஷிகா, லாபம் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் கேட்டுக் கொண்டபோது தான் சற்றும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டதாகவும் ஏனெனில் கதையில் உள்ள ஒவ்வொரு கேரக்டருக்கும் இயக்குனர் முக்கியத்துவம் தருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் விஜய் சேதுபதி மற்றும் ஜெகபதிபாபு ஆகிய இருவருடனும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்தார்

விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், தன்ஷிகா, கலையரசன், ஜெகபதிபாபு, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

டி.இமான் இசையில் ராம்ஜி ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்சேதுபதி மற்றும் ஆறுமுக குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.