சிஎஸ்கேவில் இருந்து வெளியேறும் பிளமிங்.... பயிற்சியாளராக தோனி?
பிளமிங் சிஎஸ்கே அணியில் இருந்து சென்று விட்டால், தோனி தான் அடுத்த பயிற்சியாளர் என்பது நிச்சயம்.
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு தற்போது 42 வயது ஆகிவிட்டதால் அவர் அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே காலில் அறுவை சிகிச்சையுடன் கடைசியாக இந்த தொடரில் விளையாட தோனி முடிவெடுத்த நிலையில் மீண்டும் காயத்துக்கு உள்ளானார். இதனால் அடுத்த சீசன் தோனி வீரராக விளையாட மாட்டார் என தெரிகின்றது.
விரைவில் கேப்டனாகும் ருதுராஜ்? இந்திய அணி 2027 உலகக்கோப்பை வெல்வது உறுதி!
அத்துடன், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளமிங், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ அண்மையில் கோரியது. இந்த பொறுப்புக்கு பிளமிங் விண்ணப்பித்தால், அவருக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும்.
பிளமிங் பயிற்சியாளராக வர பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விரும்புவதாகவும் சிஎஸ்கே அணியில் தோனி மென்டராக அடுத்த ஆண்டிலிருந்து செயல்பட தொடங்கினால், பிளமிங்கின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால், பிளம்மிங் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வர போகிறார் என்று கூறப்படுகின்றது.
இதன் மூலம் அடுத்த சீசனில் இருந்து சிஎஸ்கே அணி தோனியின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தோனி வீரராக இல்லை என்றாலும் அணியின் பயிற்சியாளராக வீரர்களை வழி நடத்தி வெற்றி பெற உதவுவார்.
இதேவேளை, பிளமிங் சிஎஸ்கே அணியில் இருந்து சென்று விட்டால், தோனி தான் அடுத்த பயிற்சியாளர் என்பது நிச்சயம்.