சிஎஸ்கே அணியின் தோல்விக்கு இதுதான் காரணமா? துரோகம் இழைக்கப்பட்டதா? 

ஐபிஎல் தொடர் நடக்கும் அதிகமான மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு இதுதான் காரணமா? துரோகம் இழைக்கப்பட்டதா? 

18வது ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் நடக்கும் அதிகமான மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மார்ச் 28 அன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியுடன் தோல்வியை தழுவிய நிலையில், சென்னை அணி தோல்வி அடைந்ததற்கு ஆடுகளமே காரணம் என்றும் என்றும் ஆடுகளத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும் அணியின் தலைமை பயிற்சியாளரான பிளமிங், கூறி இருந்தார். 

பொதுவாக ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவார்கள். அதன்படியே ஆடுகளத்தையும் தயார் செய்வார்கள். இந்த நிலையில், ஆடுகளத்தை பரமரிக்கும் பணியை முழுவதுமாக பிசிசிஐ தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

முக்கால்வாசி மைதானங்களை பேட்டிங்கிற்கு சாதகமாக தயார் செய்ய அறிவுறுத்தியதாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் சென்னை சேப்பாக்க மைதானத்தையும் மாற்றி அமைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விக்கு ஆடுகளமே காரணம் என்றும் வழக்கத்தை போல ஆடுகளம் இருந்திருந்தால், சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.