கம்பீரை நீக்க ரோஹித் - கோலி திட்டம்... வெளியான தகவல்...  உண்மையில் நடந்தது என்ன?

கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணியானது, இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது. 

கம்பீரை நீக்க ரோஹித் - கோலி திட்டம்... வெளியான தகவல்...  உண்மையில் நடந்தது என்ன?

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர், கவுதம் கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்குவதற்காக 
வேண்டுமென்றே இந்திய அணி தோல்வி அடையும் வகையில் மோசமாக விளையாடியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணியானது, இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது. 

இந்திய அணியானது பல வருடங்களாக ஒருநாள் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் விளையாடி நிலையிலும் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

இந்த 4 வீரர்கள் இனி அணிக்கு வேண்டாம்.. பிசிசிஐ சந்திப்பில் கம்பீர் தீர்மானம்?

இந்த நிலையில், இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0 - 3 என்ற கணக்கில் தொடரை இழந்ததுடன், ஆறு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 91 ரன்களும், விராட் கோலி 93 ரன்களும் மட்டுமே எடுத்தனர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மிக மோசமான செயல்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தி இருப்பது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அதே சமயம் 
இதனையடுத்து, பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்ததில் இருந்து தான் இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கவுதம் கம்பீரை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதிதான் இது என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வேண்டுமென்றே சரியாக ரன் குவிக்கவில்லை என கம்பீருக்கு ஆதரவாக ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 

ஆனால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவார்களா என்ற விடயத்தை கூட பார்க்காதல் சிலர் இவ்வாறான அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். 

தங்கள் கேரியரின் கடைசி கட்டத்தில் உள்ள ரோஹித் சர்மா இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளிலும், விராட் கோலி 2 அல்லது மூன்று ஆண்டுகளிலும் ஓய்வு பெறும் நிலையில் உள்ள சூழலில் அவர்கள் சரியாக ஆடவில்லை என்றால் அவர்களை அணியில் இருந்து நீக்க வேண்டி வரும் என்பது அவர்களுக்கு யாரும் சொல்லி தெரிய வேண்டியதல்ல.

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படும் முன்பு 5 ஆண்டு காலம் எம்பி ஆக இருந்த நிலையில், கம்பீர் பதவிக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவே அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் இவ்வாறான கருத்துக்களை பரப்பி வருவதாக கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp