சச்சின் ரீ-ரிலீஸ் பார்த்து பரவசமான இயக்குநர் மிஸ்கின்! என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் "சச்சின்", வெளியான 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் "சச்சின்", வெளியான 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2005 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தளபதி விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தை இயக்கியவர் ஜான் மகேந்திரன், தயாரிப்பு கலைப்புலி எஸ். தானுவிடம், இசை தேவி ஸ்ரீ பிரசாத் என அந்த காலத்திலேயே பெரிய கூட்டணியாக அமைந்த படம்.
இந்த படம் வெளியான 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிறப்பாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது.
இந்நிலையில், இயக்குனர் மிஸ்கின், "சச்சின்" படத்தை பார்த்து தனது விமர்சனங்களை ஊடகங்களுடன் பகிர்ந்துள்ளார்.
மிஸ்கின் என்ன சொன்னார்?
“இந்தப் படத்தை பார்க்கும் போது எனக்கு என்னோட கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்தது. அது போல ஒரு டைம் டிராவல் பண்ணின மாதிரி. இது ஒரு ஜாலியான, அழகான படம். விஜய் இந்தப் படத்தில் மிகவும் ஹான்சமாக இருக்கிறார். அவருடைய கேரியரில் இதுதான் அவரை மிகவும் அழகாக காட்டிய படம் என நான் நினைக்கிறேன்.”
“தானு என்னை மகன் போல கவனித்தவர். அவருடைய அழைப்பில் தான் சச்சின் படம் பார்ப்பதற்காக வந்தேன். என் சினிமா பயணத்தின் ஆரம்பமே ‘யூத்’ மாதிரியான யூத் படங்கள் தான்,” என தெரிவித்தார்.
“விஜய் சினிமாவை விட்டு போகக்கூடாது. அரசியல் பணிகளும் பார்க்க வேண்டும், அதே சமயம் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும். விஜய் போன்ற நடிகர்கள் சினிமாவில் தொடர வேண்டியவர்கள். இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்த அவர் கலை துறையை விட்டு சென்றால் அது ஒரு பெரிய இழப்பாகும்.” என்றார்.