தயாசிறி ஜயசேகர

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு சென்றிருந்தவர்களுக்கு எதிராகவே ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அந்த மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் போஷகர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ.திஸாநாயக்க, டிலான் பெரேரா உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர்.