பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தாளியாக வந்துள்ள வனிதா, ஒவ்வொரு போட்டியாளரையும் கன்னத்தில் அறைவது போல் கேள்வி கேட்டு வருகிறார்.

அஜித்துடன் அபிராமி நடித்த படமான ‘நேர் கொண்ட பார்வை’ படம் குறித்து ‘நோ மீன்ஸ் நோ’ குறித்தும் வனிதா நேற்று பேசினார்.

‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் கதையே ‘நோ மீன்ஸ் நோ என்பதுதான். அந்த படத்தில் அபிராமி கதை தெரிஞ்சுதான் நடித்தாரா என்பது தெரியவில்லை.

ஒரு பெண் தனது விருப்பம் போல் உடை அணியலாம், விருப்பம் உள்ளவர்களுடன் பழகலாம், இதெல்லாம் ஒரு பெண்ணோட விருப்பம், அவளோட் லைஃப்.

ஆனால் இதை வைத்து ஒரு பெண்ணை ஜட்ஜ் செய்து அவன் தொட்ட மாதிரி நானும் தொடலாம் என்று தொட முடியாது. ஒரு பெண்ணோட விருப்பம் இல்லாம புருஷனே தொட முடியாது. அது தான் இந்த படத்தோட ‘நோ மீன்ஸ் நோ’ என்ற ஸ்க்ரிப்ட்’ என்று வனிதா கூறினார்.

இப்படி ஒரு கதையுள்ள படத்தில் நடித்துவிட்டு வந்து, உன்னோட தனித்தன்மையை தொலைத்துவிட்டு ஒருவன் பின்னாடி உன்னால் எப்படி ஓட முடிந்தது? என்று அபிராமியை வனிதா துளைத்தெடுக்கும் கேள்வி அபிராமிக்கு மட்டுமின்றி அனைவருக்குமான கேள்வியாக பார்க்கப்படுகிறது.