உள்ளங்கை அரித்தால் பணம் வருமா?
உள்ளங்கை அரித்தால் யோகம் என பலர் கூறுவது உண்டு. இது ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் எனும் நூலிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது.
உள்ளங்கை அரித்தால் யோகம் என பலர் கூறுவது உண்டு. இது ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் எனும் நூலிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. உள்ளங்கை அரித்தால் நீங்கள் புது நபரைப் பார்க்கப் போகிறீர்கள் என்று ஒரு சிலர் கூறுவர்.
வலது கை அரித்தால் பணம் வரும் என்று சிலர் கூறுவர். இடது கை அரித்தால் பணம் செலவழியும் என்பர். இது போன்று பல பேர் பல விதமாக உள்ளங்கை அரிப்பு பற்றி மூடநம்பிக்கைகளைப் பரப்பியுள்ளனர்.
ஆனால் அது இன்றளவும் உண்மையா என்று நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆனாலும் இன்றுவரை மக்கள் இதை நம்பி வருகின்றனர்.