மீண்டும் உலககோப்பை பைனலா?.. இந்தியா ஜெயிக்கும் கவலைப்படாதிங்க.. இதான் காரணம்... ரவி சாஸ்திரி!
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதல் இரண்டு நாட்களுக்கும் மழை அச்சுறுத்தல் இருப்பதால், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும், எனவே டாஸ் வென்று பந்து வீசுவது முக்கியம் என்று இரு அணிகளும் தீர்மானித்து இருந்தனர்.
இதனையடுத்து, இரு அணிகளுமே நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இடம் கொடுத்து இருந்ததுடன், இந்திய அணியில் கூடுதலாக ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெற்று இருந்தார்.
இப்படியான நிலையில் இந்திய அணி டாஸ் இழந்தது. இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்து 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணியால் 208 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி தோற்றால், 31 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இருந்து வருகின்ற சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
வம்பிழுத்த தென்னாப்பிரிக்க வீரர்.. பதிலுக்கு கேஎல் ராகுல் செய்த விஷயம்.. இந்த அசிங்கம் தேவையா.!
மேலும் உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு சிறிய மருந்தைக் கூட இந்திய ரசிகர்களுக்கு கொடுக்க முடியாது. இந்த நிலையில் இந்தப் போட்டி மழையால் 59 ஓவர்கள் உடன் நிறுத்தப்பட்ட பிறகு, இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி நம்பிக்கை அளிக்கும் விதமாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது, போட்டி இன்னும் முடியவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியா சராசரியான ஒரு ஸ்கோரை தற்பொழுது வைத்து உள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காதான் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தாக வேண்டும். இந்த நிலையில் இந்தியா தங்களிடம் அனல் பறக்கும் வேகம் பந்து வீச்சு இருப்பதை மனதில் வைத்து, நம்பிக்கையுடன் போட்டியில் விளையாட வேண்டும். அப்படி செய்தால் வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் என்று கூறி உள்ளார்.