Sri Lanka 24 Hours Online Breaking News

எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்

0

Enai Noki Paayum Thota Movie Review

நடிகர்-தனுஷ்
நடிகை-மேகா ஆகாஷ்
இயக்குநர்-கௌதம் வாசுதேவ் மேனன்
இசை-தர்புகா சிவா
ஓளிப்பதிவு-மனோஜ் பரமஹம்சா

தனுஷ் சென்னையில் தங்கி படித்து வருகிறார். அவர் படிக்கும் கல்லூரியில் திரைப்பட படப்பிடிப்பு நடக்கிறது. அந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் மேகா ஆகாஷை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் தனுஷ். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அந்த கல்லூரியில் 2 மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடைபெறுகிறது.

வருங்கால மனைவிக்கு ஆகாஷ் அம்பானி கொடுத்த 500 கிலோ தங்கத்தால் ஆன பரிசு..!

இருவரும் ஜாலியாக காதலித்து வருகின்றனர். தனுஷிடம் தான் ஒரு அனாதை என கூறும் மேகா ஆகாஷ், இப்படத்தின் இயக்குநர் தான் தன்னை சிறுவயதில் இருந்து வளர்த்து வருவதாக கூறுகிறார். அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே இப்படத்தில் நடிப்பதாகவும் சொல்கிறார். உடனே தனுஷ் அவரை யாருக்கும் தெரியாமல் தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார்.

கவினுக்கு ஐஸ் வைக்கும் அப்பாவும் மகளும்

சில நாட்களுக்கு பின் மேகா ஆகாஷை தேடி அந்த படத்தின் இயக்குநர், தனுஷ் வீட்டுக்கு வருகிறார். அப்போது தனுஷிடம் 5 நாட்கள் கழித்து என்னை பார்க்க வா என சொல்லிவிட்டு இயக்குநருடன் சென்னை செல்கிறார் மேகா ஆகாஷ்.

Enai Noki Paayum Thota, Reviews

அதேபோல் 5 நாட்களுக்கு பின் மேகா ஆகாஷை பார்க்க சென்னைக்கு செல்லும் தனுஷ், அவரை தேடி அலைகிறார். எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடையும் தனுஷ் மீண்டும் சொந்த ஊருக்கு செல்கிறார். அவரிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கும் தனுஷுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை

இம்மாதிரியான சூழலில் 4 ஆண்டுகளுக்கு பின் திடீரென தனுஷுக்கு போன் செய்யும் மேகா ஆகாஷ், தான் மும்பையில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருப்பதாகவும், தன்னை வந்து காப்பாற்றுமாறும் கூறுகிறார். இதன் பின்னர் தனுஷ் மும்பை சென்று மேகா ஆகாஷை காப்பாற்றினாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

தனுஷ், வழக்கம் போல் தனது அசத்தலான நடிப்பால் கவர்கிறார். காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதிக்கிறார். மேகா ஆகாஷ் தனது அழகால் கவர்கிறார். தனுஷ்-மேகா ஆகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சசிகுமார் சிறிது நேரமே வந்தாலும் படத்தின் திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதுவரை கிராமத்து கதையில் நடித்து வந்த சசிகுமாரை, இந்த படத்தில் ஸ்டைலாக வருவது, ஆங்கிலத்தில் பேசுவது என வித்தியாசமாக காட்டியுள்ளார் கவுதம் மேனன்.

Enai Noki Paayum Thota, Reviews

கவுதம் மேனன் இக்கதையை கையாண்ட விதம் சிறப்பு. காதல் கதையை சொல்வதில் கைதேர்ந்த கவுதம் மேனன், நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டே போகிறார். வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம். காதல் காட்சிகள் மெதுவாக நகர்வது சற்று சோர்வை தருகிறது.

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியாவில் வரவேற்பு

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. தர்புகா சிவாவின் பாடல்கள் ஏற்கனவே செம ஹிட் அடித்த நிலையில், விஷுவல் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. தர்புகா சிவா பாடலை போல் பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ கவுதம் மேனன் இஸ் பேக்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like