டாஸ் வென்றும் பிரயோஜனமில்லை.. மொத்தமாக ஏமாந்துவிட்டோம்.. பட்லர் புலம்பல்!

உலகக்கோப்பை தொடரில் அட்டாக்கிங் சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. 

டாஸ் வென்றும் பிரயோஜனமில்லை.. மொத்தமாக ஏமாந்துவிட்டோம்.. பட்லர் புலம்பல்!

உலகக்கோப்பை தொடரில் அட்டாக்கிங் சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் வெறும் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி கத்துக்குட்டி அணியான ஆஃப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்திருப்பதால், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு இன்னும் கடினமாகியுள்ளது. 

இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேசுகையில், டாஸ் வென்று அவ்வளவு ரன்களை விட்டுக் கொடுத்தது ஏமாற்றமாக அமைந்துள்ளது. எல்லாமே முதல் பந்தை தவறவிட்ட எனது தவறில் இருந்து தான் தொடங்கியது.

நிச்சயம் அனைத்து துறைகளிலும் எங்களைவிட சிறப்பாக செயல்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணியை பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எங்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை. 

ஆஃப்கானிஸ்தான் அணியில் மிகச்சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள். அதேபோல் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பனிப்பொழிவும் மைதானத்தில் இல்லை. அவர்கள் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் வீசி கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தினார்கள்.

இதுபோன்ற தோல்விகள் எங்களை கஷ்டத்தை கொடுக்கும். அதில் இருந்து வேகமாக மீள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனை மாற்றும் அளவிற்கு எங்களின் ஆட்டமும் மாற வேண்டும். நிச்சயம் நாங்கள் சிறந்த கம்பேக்கை கொடுப்போம். 

இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்கள் பலரும் அழுத்தம் அதிகமுள்ள போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp