தோல்விக்கு இதுதான் காரணமா? உண்மையை உடைத்த  இங்கிலாந்து கேப்டன்!

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

தோல்விக்கு இதுதான் காரணமா? உண்மையை உடைத்த  இங்கிலாந்து கேப்டன்!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

வலுவான அணிகளில் ஒன்றான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் சிலர், மோசமான பிட்ச்களே இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் என பேசி வரும் நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸோ இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பிட்சை குறை சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நட்சத்திர வீரர்கள் இல்லை... ஆனாலும் நாங்க இங்கிலாந்த ஜெயிச்சதுக்கு இவர் தான் முக்கிய காரணம்; சுப்மன் கில் ஓபன் டாக்!

இது குறித்து பென் ஸ்டோக்ஸ்  பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமெனில், இந்த தொடர் துவங்குவதற்கு முன்பு ஆடுகளம் எப்படி இருக்க போகிறது என்றே ஐடியாவே எனக்கு கிடையாது. நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ராஞ்சி ஆடுகளத்தின் தன்மை மாறி கொண்டே இருந்தது ஆச்சரியமளித்தது. 

எங்களது தோல்விக்கு பிட்சை குறை சொல்லவே முடியாது. இந்திய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடர் எங்களுக்கு அதிக சவால் நிறைந்த தொடராக உள்ளது, அதேவேளையில் இது மிக சிறந்த தொடர். இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளுக்கான ஆடுகளமுமே மிக சிறப்பாக இருந்தது என்பதே உண்மை. 

எங்களை விட இந்திய அணி இந்த ஆடுகளத்தில் வலுவான அணியாக உள்ளது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக மாறிவிட்டால் பேட்ஸ்மேன்களுக்கு அது பெரிய சவால் தான். நான்கு போட்டிகளுக்கான ஆடுகளமும் சிறப்பாகவே இருந்தது என்பதால் நான் ஆடுகளத்தை பற்றி எந்த குறையும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...