19 பந்தில் மெகா வெற்றி.. இப்படியும் நடக்குமா... வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து! 

டாஸ் வென்று பந்து வீசிய இங்கிலாந்து அணி வெறும் 13.2 ஓவரில் ஒமான் அணியை 47 ரன்களுக்கு சுருட்டியது.

19 பந்தில் மெகா வெற்றி.. இப்படியும் நடக்குமா... வரலாற்று சாதனை படைத்த இங்கிலாந்து! 

டி20 உலகக் கோப்பை தொடரில் ஒமான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி  மெகா வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி பேசி இருக்கிறார்.

டாஸ் வென்று பந்து வீசிய இங்கிலாந்து அணி வெறும் 13.2 ஓவரில் ஒமான் அணியை 47 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணியில் மொத்தம் பத்து வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். 

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் 8 பந்தில் ஆட்டம் இழக்காமல் 24 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி வெறும் 3.1வரில் 19 பந்துகளில் இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. 

இதன் மூலமாக ஸ்காட்லாந்து அணியை விட ரன் ரேட்டில் முன்னே சென்று இருக்கிறது. ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியா அணியுடன் தோற்க, இங்கிலாந்து தனது கடைசி போட்டியில் நமீபியா அணிவுடன் வென்றால் அடுத்த சுற்றுக்கு வந்து விட முடியும்.

ஆஸ்திரேலிய அணியை நம்பி இங்கிலாந்து அணி இருக்கும் நிலையில், நேற்று ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் ஹேசில்வுட், இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு வராமல் இருப்பதற்கு, ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்துடன் மெதுவாக தட்டி விளையாட கூட செய்யலாம் என்று  பேசியிருந்தார். 

ஒமான் அணிக்கு எதிரான மெகா வெற்றிக்கு பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் “ஆரம்ப விக்கெட்டுகளை எங்கள் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிய விதத்தில், போட்டிக்கு நல்ல தொனி அமைக்கப்பட்டது. 

எங்களுக்கு அடுத்து இரண்டு நாட்களில் இன்னும் ஒரு பெரிய போட்டி இருக்கிறது. எங்கள் பவுலர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஆடுகளத்தில் பவுன்ஸ் கொஞ்சம் இருந்தது. பந்து கொஞ்சம் திரும்பவும் செய்தது. விக்கெட் இப்படி இருக்கும் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை.

நாங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கான மெசேஜாக இருந்தது. எங்களுடைய ரன் ரேட்டை அதிகரிப்பது சம்பந்தமாக நாங்கள் பேசினோம். எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத்தான் தெரியும். 

எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து ஆட்டம் பற்றி நாம் யோசிக்க முடியாது. நாம் நம் கையில் இருக்கும் விஷயம் பற்றிதான் யோசிக்க முடியும். நமீபியா அணிக்கு எதிராக பெரிய போட்டி இருக்கிறது. எங்கள் கவனம் அந்தப் போட்டியில் இருக்கிறது” என்று கூறி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp