வெல்வோம் என நினைச்சேன்.. ரொம்ப ஏமாற்றமா இருக்கு? வேதனையில் இங்கிலாந்து கேப்டன்

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

வெல்வோம் என நினைச்சேன்.. ரொம்ப ஏமாற்றமா இருக்கு? வேதனையில் இங்கிலாந்து கேப்டன்

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் இந்த போட்டி மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆட்டத்தின் பாதியில் 230 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் எங்களுடைய பழைய கதையே தொடர்கிறது. இந்திய அணி பந்து வீசும் போது பனிப்பொழுது வந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. 

ஆனால் என்னுடைய உள்ளுணர்வு இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சேசிங் செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். இந்தத் தொடர் முழுவதும் பந்துவீச்சு நாங்கள் சிறப்பாகவே செயல்படுகிறோம். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை நாங்கள் கொடுக்கின்றோம். 

விக்கெட்டுகளையும் எடுக்கின்றோம் 230 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் மற்ற வீரர்களுக்கு இருக்கும் அழுத்தத்தை எடுத்துக்கொண்டு பார்ட்னர்ஷிப்பை அமைக்க முயற்சி செய்தேன்.

இதன் மூலம் இந்தியாவின் உத்வேகத்தை குலைக்க முடிவு செய்திருந்தேன். எங்களுக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. அதுதான் எங்களுடைய பிரச்சனையாக இருக்கிறது. 
230 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது எந்த நெருக்கடியும் வீரர்களுக்கு கிடையாது. ஆனால் எங்களுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. எங்கள் அணியின் தலைசிறந்த வீரர்கள் எல்லாம் அவர்களுடைய சிறந்த செயல்பாட்டில் வெளிப்படுத்தவில்லை.

அவர்களுடைய பெஸ்ட் க்கு அருகில் கூட இல்லை. பவர் பிளேவில் நாங்கள் நன்றாக தான் தொடங்கினோம். ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தனர். 

நாங்கள் பேட்டிங் செய்யும்போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. இனிவரும் ஆட்டங்களை வெற்றி பெற நாங்கள் முயற்சி செய்வோம் என்று பட்லர் கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp