எதிர் நீச்சல் தொடரில் குணசேகரனை தொடர்ந்து காணாமால் போகும் கதாபாத்திரம் யார் தெரியுமா ?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.
அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.
சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள்.
பின் இதை குணசேகரன் கண்டுபிடித்து விடுகிறார். இனி என்ன நடக்கும் என்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கும் நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பால் இறந்து விட்டார்.
இது பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் எதிர்நீச்சல் ரசிகர்களுக்கும் வேதனை அளித்து இருந்தது. பின் பல போராட்டங்களுக்குப் பிறகு ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி சீரியலில் என்ட்ரி ஆகியிருந்தார்.
முதல் நாளே இவர் போலீசாரை எட்டி உதைத்தது அதிரடியாக இருந்தது. பின் இவர் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் பெண்களிடம் கடுமையாக பேசி ஈஸ்வரியை வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இதனால் அனைவருமே என்ன செய்வதென்று புரியாமல் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். அதன் பின் குணசேகரனை போலீஸ் கைது செய்து இருந்தது. இதனால் குணசேகரன் இல்லாமல் கதையை நகர்த்த இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார்.
மேலும், சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல இயக்குனர் புது வில்லனை அறிமுகம் செய்திருக்கிறார். அவருடைய பெயர் கிருஷ்ணா மெய்யப்பன். சீரியலில் ஜனனி- சக்தி இருவரும் சேர்ந்து வாங்க நினைக்கும் கம்பெனியை கிருஷ்ணன் மெய்ப்பன் வாங்க இருக்கிறார்.
இவரும் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். முதல் நாளே இவருடைய மாஸ் என்றியும் டயலாக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இன்னொரு பக்கம் ஜான்சி ராணி மாமியார் விசாலாட்சி இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுப் பெண்களை ரொம்ப டார்ச்சர் செய்கிறார்கள்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக சீரியலில் சென்று கொண்டிருக்கும் சொத்து ட்ராக் குறித்த ப்ரோமோ தான் வெளியாகி இருக்கிறது. அதில், கதிர், ஞானத்திடம் அண்ணன் வந்தது இவர்களுக்கு கொடுக்கும் முதல் பரிசு இல்லை. இவங்க உயிர் என்று சொல்வதை ஜான்சி ராணி ஒளிந்து நின்று கேட்கிறார்.
இன்னொரு பக்கம் அப்பத்தா எல்லோரையும் அழைத்து 40% ஷேர் பற்றி உண்மையை இன்னும் இரண்டு நாட்களில் ஊர் திருவிழாவில் சொல்கிறேன் என்று சொன்னவுடன் விஷலாட்சி இப்பவே சொல்லுங்க என்று கேட்கிறார்.
ஆனால், அப்பத்தா ஏதும் சொல்லவில்லை. திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னே செல்ல வேண்டும் என்று அப்பத்தா சொல்கிறார். உடனே கரிகாலன், நீங்களும்மா போகிறீர்கள் என்று உளறி விடுகிறார். இதனால் அனைவருமே அதிர்ச்சி அடைகிறார்கள்.
இனிவரும் காலங்களில் குணசேகரன் - கதிர் திட்டமிட்டபடி அப்பத்தா- ஜீவானந்தம் கொல்லப்படுவார்களா? 40% ஷேர் யாருக்கு செல்ல இருக்கிறது போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது.