மனைவியை கொலை செய்த குணசேகரன்? அதிர்ச்சியில் ஜீவானந்தம்!
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இல்லாமல் சுவாரசியம் குறைந்து வரும் நிலையில், தற்போது ஜீவானந்தத்திற்கு அவரது மனைவியை கொலை செய்தது குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இல்லாமல் சுவாரசியம் குறைந்து வரும் நிலையில், தற்போது ஜீவானந்தத்திற்கு அவரது மனைவியை கொலை செய்தது குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
புதிய குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்த நிலையில், அவரும் தற்போது வேறு படப்பிடிப்பிற்கு சென்றதால் கதையை மாற்றியுள்ளனர்.
ஜீவானந்தத்திடம் ஈஸ்வரி உங்களது மனைவியை கொலை செய்தது குணசேகரனும் அவரது தம்பியும் தான் என்ற உண்மையை உடைத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம் என்ன செய்யப் போகின்றார்? குணசேகரன் இல்லாமல் இந்த சீரியல் எப்பொழுது சுவாரசியமாக செல்லும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.