ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர்!
இந்திய கிரிக்கெட்டில் இருந்து உத்திர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான வேக பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்பூத் ஓய்வு அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் இருந்து உத்திர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான வேக பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்பூத் ஓய்வு அறிவித்துள்ளார். இவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சமீபத்தில் ரஞ்சித் டிராபி தொடரில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடினார் அங்கித் ராஜ்பூத். இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காததால் வெளிநாட்டில் தொடரில் விளையாட தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முன்பு 2012 U19 உலகக் கோப்பை வென்ற கேப்டன் உன்முக்த் சந்த் இதே போல இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் விளையாடி வருகிறார்.
2016 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச அணிக்காக சையத் முஷ்டாக் அலி டிராபியில் 14.21 சராசரியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரபலமடைந்தார் அங்கித் ராஜ்பூத். அதன் பிறகு 2013 மற்றும் 2014 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் 31 வயதில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனக்கு வாய்ப்பு கொடுத்த இந்திய கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், நான் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். 2009-2024 வரையிலான எனது கிரிக்கெட் பயணம் மிக அற்புதமான காலகட்டம்.
அனைத்து ஏற்ற தாழ்வுகளில் என்னை ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கும், உங்கள் அனைவருடனும் நான் செலவிட்ட தருணங்களையும், உங்கள் ஆதரவையும் என்றென்றும் போற்றுவேன். கிரிக்கட் உலகிலும் அதன் வணிகப் பக்கத்திலும் புதிய வாய்ப்புகளை நான் ஆராய்வேன் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் எனது வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.