ரோஹித் சர்மா காலமானார்... ராஜஸ்தான் அணிக்காக ஆடியவர்.... என்ன நடந்தது?
மொத்தம் 7 ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 12.76 சராசரியுடன், 166 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணிக்காக லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
ராஜஸ்தான் அணிக்காக விளையாடி, ஓய்வுபெற்ற ரோஹித் சர்மா (40) காலமானார்.
2004ஆம் ஆண்டில் சர்வீஸ் அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியின் மூலம், முதல்தர கிரிக்கெட்டிற்கு அறிமுகமான ரோஹித் சர்மா, 2009ஆம் ஆண்டில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் ஓய்வு அறிவித்தார்.
மொத்தம் 7 ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 12.76 சராசரியுடன், 166 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணிக்காக லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
28 போட்டிகளில் 35.41 சராசரியுடன் 850 ரன்களை அடித்துள்ளார். அதில், இரண்டு சதம், 3 அரை சதங்களும் அடங்கும். 14 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்காக 4 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், அதில் 32.75 சராசரியுடன் 131 ரன்களை அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 135.05 ஆக உள்ளது. 32.75 சராசரியில் ஆடியிருக்கிறார்.
லெக் ஸ்பின் வீசி, 6 விக்கெட்களை எடுத்துள்ளார். இருப்பினும், ராஜஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், 2017-ல் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.
2017-ல் ஓய்வுபெற்றப் பிறகு, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சி அகடமியை துவங்கி, பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், 40 வயதாகும் இவர், திடீரென்று காலமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது கிரிக்கெட் அகடமியில் பயிற்சி அளித்த வந்த ரோஹித் சர்மா, திடீரென்று மயங்கி விழுந்த நிலையில், மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனை சென்றதும் சிறிது நேரத்திலேயே அவர் காலமாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு, சில ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்சினை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.