இந்திய மீனவர்கள்

ஆனமடுவ – புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த நபரை ஓகஸ்ட் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடுவ நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 700 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உறுப்பினரான 28 வயதுடைய குறித்த சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.