நாடாளுமன்ற தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துககு நீடிக்க எதிர்பார்ப்பதாக குழுவின்தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்க உள்ளதாக ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதியுடன் குறித்த குழுவின் பணிகள் முடிவுக்கு வரவிருந்தன. இருப்பினும் மேலும் காலம் தேவைப்படுவதாக குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் உயிர்த்த தாக்குதல் தொடர்பாக ஆராய நியமித்த ஜனாதிபதி குழுவின் உறுப்பினர்கள் மூவர் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.