கொழும்பில் பாரிய தீ விபத்து - 23 பேர் வைத்தியசாலையில்
காயமடைந்தவர்கள் அந்த வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் எனவும் இவர்களின் 6 பேரின் நிலைமை கவலைக்கடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

கொழும்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள எட்டு மாடிகளை கொண்ட ஆடை கடை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் அந்த வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் எனவும் இவர்களின் 6 பேரின் நிலைமை கவலைக்கடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.