சென்னை அணியில் மீண்டும் சுரேஷ் ரெய்னா? வெளியான தகவல்!

தோனியின் கேப்டன்ஷிப் கீழ் விளையாடிய சுரேஷ் ரெய்னா, சென்னை அணியின் ரசிகர்களால் "சின்ன தல" என்று அன்புடன் அழைக்கட்டு வருகிறார்.

சென்னை அணியில் மீண்டும் சுரேஷ் ரெய்னா? வெளியான தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தோனியின் கேப்டன்ஷிப் கீழ் விளையாடிய சுரேஷ் ரெய்னா, சென்னை அணியின் ரசிகர்களால் "சின்ன தல" என்று அன்புடன் அழைக்கட்டு வருகிறார்.

அத்துடன், சென்னை அணியின் துணை கேப்டனாக ஏராளமான போட்டிகளில் விளையாடி அணியை சிறப்பான முறையில் சுரேஷ் ரெய்னா வழி நடத்தியுள்ளார்.

பல போட்டிகளில் தனி ஒரு வீரராக போராடி சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா வெற்றியை தேடி தந்துள்ளார். சென்னை அணிக்காக 205 போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 528 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும், சென்னை அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற போது சுரேஷ் ரெய்னா அணியில் இடம் பெற்றிருந்தார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp