26 வயதில் மரணமடைந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர்... அதிர்ச்சி தகவல்!

உருகுவேவைச் சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் 2015ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். அவரால் முதல் 30 இடங்களுக்குள் வரமுடியவில்லை.

ஆனால், உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான ஆறு அழகிகளில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து, தலைமுடி பராமரிப்பு தொடர்பான பொருட்களையும் விற்பனை செய்யும் ஷே டி அர்மாஸ் ஸ்டுடியோ எனப்படும் நிறுவனத்தை நடத்தினார்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் பெரெஸ் ஸ்க்ரிமினி அறக்கட்டளையுடன் இணைந்து சேவை செய்து வந்தார்.

இந்நிலையில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை எடுத்துவந்தார். உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp