Fuel prices have been increased

Fuel prices have been increased: எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாயாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா IOC

இதேவேளை, எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்த நிலையில, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எாிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

ஐ.ஓ.சி ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றா் ஒன்றின் விலை 4 ரூபாயாலும், சுப்பா் டீசல் லீற்றா் ஒன்றின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Fuel prices have been increased: IOC நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

பெற்றோல் விலை அதிகரிக்கப்படவில்லை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்